தோட்டத்துக்கு காவலுக்கு சென்ற விசவாயி, யானை தாக்கி பரிதாபமாக பலி !

தோட்டத்துக்கு காவலுக்கு சென்ற விசவாயி, யானை தாக்கி பரிதாபமாக பலி ! - Daily news

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் அத்தியூர் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்ற விவசாயி யானை தாக்கியத்தில் உயிரிழந்து இருக்கிறார். 46 வயதான பெரியசாமி, கே.என்.பாளையம் அட்டணை என்ற கிராமத்தில் வனப்பகுதியையொட்டி இருக்கும் 3 ஏக்கர்  நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். தனது நிலத்தில் மரவள்ளிகிழங்கை பயிர்செய்து வந்துள்ளார். இதே பகுதியில் சடையப்பன் என்பவரும் மரவள்ளி கிழங்கு பயிரிட்டு வருகிறார்.  


வனப்பகுதியை ஒட்டி இருக்கும் நிலம் என்பதால் தோட்டத்தில் பயிரிட்டு உள்ள கிழங்குகளை சாப்பிட வனவிலங்குகள் இரவு நேரத்தில் வந்து தோட்டத்தை நாசம் செய்துவிட்டு செல்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது. 


இதனால் நஷ்டமடைந்த பெரியசாமி, சடையப்பன் இரவு நேரத்தில் காவலுக்கு சென்று உள்ளனர். இரவு 11 மணியளவில் இருவரும் தூங்கிக்கொண்டு இருக்கும் போது, திடீரென ஒரு காட்டு யானை இவர்களது தோட்டத்துக்குள் நுழைந்து இருக்கிறது. அதை பார்த்த பெரியசாமி, சடையப்பன் இருவரும்  பட்டாசு வெடித்து யானையை விரட்ட முயன்று உள்ளனர். 


பட்டாசு சத்ததில் ஆவேசமடைந்த யானை இருவரையும் தாக்க தொடங்கியுள்ளது. அப்போது பெரியசாமி யானையிடம் தப்பிக்க முடியாமல் சிக்கிக்கொள்ள, சடையப்பன் யானையிடம் இருந்து தப்பித்துள்ளார். யானையிடம் சிக்கிய பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
தப்பித்து ஓடிவந்த சடையப்பன் காலில் பலத்த காயம் ஏற்பட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். யானையிடம் சிக்கி பலியான விவசாயி பெரியசாமிக்கு அழகம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு  மகளும் இருக்கிறார்கள்.

இந்த சம்பவத்துக்கு பிறகு, இரவு நேரத்தில் தோட்டத்துக்கு காவலுக்கு செல்லும் விவசாயிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று சத்தியமங்கலம் வனத்துறையினர் எச்சரித்து இருக்கிறார்கள்.

Leave a Comment