வெற்றிநடைப்போடும் தமிழகம் என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கோவையில் இன்று இஸ்லாமிய மக்களின் பாதுகாப்பு குறித்து பேசினார்.


அந்நிகழ்வில் பேசிய அவர், ‘’ மதம், சாதி என்று எதைப்பார்த்தும் அ.தி.மு.க ஆட்சி செய்தது இல்லை. அனைவரையும் சமமாக தான் நடத்துகிறோம். அனைவருக்குமான ஆட்சி தான் நடந்துக்கொண்டு உள்ளது. எந்த சூழ்நிலையிலும் இஸ்லாமியர்களின் உரிமைகளை அ.தி.மு.க அரசு விட்டு கொடுக்காது. 


மத்திய அரசு கொண்டு வரும் சட்டங்கள் குறித்து இஸ்லாமிய மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். இந்த மண்ணில் பிறந்த அனைவருக்கும் வாழ்வதற்கு உரிமை உண்டு. யாரையும் யாரும் மிரட்ட முடியாது. இஸ்லாமியர்களுக்கு என்றைக்கும் துணை நிற்கும் அதிமுக அரசு” என்றார்