திருச்செந்தூரில் தமிழக தேர்தல் பரப்புரைக்காக சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.


தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அப்போது திருச்செந்தூரில் மகளிர் குழுக்களுடன் தேர்தல் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது  திருச்செந்தூர் பகத்சிங் பேருந்துநிலையம் முன்பு முன்னாள் சட்டமன்ற தொகுதி செயலாளர் வடமலைப்பாண்டியன் தலைமையில் பூரண கும்பத்துடன் மரியாதை செய்து வரவேற்பு அளிக்கப்பட்டது.


தூத்துக்குடியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’நான் ஒரு விவசாயி என்று சொன்னால் ஸ்டாலினுக்கு கோபம் வருகிறது. விவசாயிகளை பாதுக்காக்க கூடியது அதிமுக அரசு. வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றவுடன், வீடு இல்லாதவர்களுக்கு, அரசே நிலம் கொடுத்து கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கும். 


ஆட்சிக்காலத்தில் மக்களை பார்க்காத கட்சி திமுக. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற நினைக்கிறார் ஸ்டாலின். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருந்தது. ஆட்சியில் இல்லாத போதும் கூட அடாவடியில் ஈடுபடுகிறார்கள். தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக மேற்கொண்டதன் விளைவு இந்த பருவ மழையின் போது தமிழகத்தில் அனைத்து ஏரிகளும் நிரம்பி உள்ளது” என்றார்.