எடப்பாடி தொகுதி மக்கள் 2011 மற்றும் 2016-ல் வெற்றி பெற வைத்துள்ளீர்கள். ஒவ்வொரு முறையும் உங்களை சந்திக்கும் போது, எனக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. உங்களது ராசியால் தான் முதலமைச்சரானேன்.” என்று எடப்பாடியில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.


மேலும் அவர், ‘’ தமிழகத்தில் 234 தொகுதியில் முதலமைச்சர் தொகுதி என்ற பெருமை எடப்பாடிக்குத்தான் உள்ளது. எத்தனை பிறவி எடுத்தாலும் எடப்பாடி தொகுதி மக்களை மறக்க மாட்டேன். ஒவ்வொரு முறையும் எனக்கு உயர்வைக் கொடுத்து வரும், வாக்காள பெருமக்கள் இந்த முறையும் எனக்கு வாக்களிக்க வேண்டும். எவ்வளவோ கூட்டங்களில் பேசினாலும், சொந்த மண்ணில் பேசுகிறபோது எல்லையில்லா மகிழ்ச்சி. நான் எப்போதும் அதே பழனிசாமியாகத்தான் இருக்கிறேன். உங்கள் வீட்டை சேர்ந்த ஒருவர் வேட்பாளராக நிற்பதாக எண்ணி வாக்களிக்க வேண்டும். 


உங்கள் வீட்டை சேர்ந்த ஒருவர் வேட்பாளராக நிற்பதாக எண்ணி வாக்களிக்க வேண்டும். நான் எப்போதும் அதே பழனிசாமியாகத்தான் உள்ளேன். உங்களில் ஒருவராகத் தான் நான் உள்ளேன். உங்கள் எல்லோரையும்தான் முதலமைச்சராக பார்க்கிறேன். இந்த முறை அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக நிற்கும் வாய்ப்பு  கிடைத்துள்ளது. மீண்டும் முதலமைச்சராவதற்கு எனக்கு வாக்களிக்க வேண்டும்.


ஜெயலலிதா இல்லாத நிலையில், என்னை முதலமைச்சராக முன்னிறுத்தும் தேர்தல். எடப்பாடியில் இருக்கும் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளும் வகையில் இந்த வெற்றி அமைய வேண்டும். நீங்கள் வைத்த கோரிக்கை எல்லாமே நிறைவேற்றியுள்ளேன். ஆனால் ஸ்டாலின் இங்கு வந்து எடப்பாடி பழனிசாமி எதுவுமே செய்யவில்லை என்று கூறியுள்ளார். பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுத்தால் அது ஸ்டாலினுக்குத்தான் கொடுக்க வேண்டும். ” என பேசினார்.