சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்  தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். 5ம் கட்ட பிரசாரத்தை கோவையில் மேற்கொண்டார். 


அப்போது பேசிய அவர், ‘’  ஊரெல்லாம் தேடி நல்லவர்களை எங்கள் கட்சியில் இணைக்க முயற்சி செய்து வருகிறோம். மக்களுக்கு நல்லது செய்யும் சித்தாந்தத்தோடும் மற்றும் எண்ணத்தோடும் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் எங்களுடன் கை கோர்க்கலாம், மக்கள் நீதி மய்யத்தில் இணையலாம். 


ரஜினி தெரிவித்து வரும் கருத்துக்கள் குறித்தும் மற்றும் அவரது அரசியல் நிலைப்பாடு குறித்தும் நான் எதுவும் கருத்து கூற முடியாது. ஆனால் ரஜினியிடம் ஆதரவு கேட்கும் போது உங்களுக்கு தெரியாமல் கேட்க மாட்டேன்.” என்று கோவை செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்து இருக்கிறார்.