தமிழகம் முழுவதும் வாக்குபதிவுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் நிலையில் அரக்கோணம் அருகே  தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 130 வாக்காளர்களை கொண்ட அரக்கோணம் அடுத்த சித்தாம்பாடியில் அம்பேத்கார் நகர் மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை எனப் புறக்கணித்து போராட்டத்தில் இறங்கினார்.


தேர்தல் பிரசாரத்தின் போது கூட எந்த ஒரு கட்சி வேட்பாளர்களும் வாக்கு சேகரிக்க வரவில்லை என்று வேதனை தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.