“எங்கு பார்த்தாலும் அடியாட்கள்.. இப்படியொரு பொதுக் குழுவை பார்த்ததேயில்லை” என்று, 'நமது அம்மா நாளிதழ்' முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் பேசியிருந்த நிலையில், “நமது அம்மா நாளிதழ் மருது அழகுராஜ் முறைகேடு செய்தவர்” என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்க குற்றச்சாட்டி உள்ளார்.

“அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் யார்?” என்கிற ஒற்றை தலைமை விவகாரம், விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் உச்சக்கட்டத்தை எட்டி, இருக்கிறது. 

இந்த நிலையில் தான், “தொண்டர்கள் புடை சூழ அதிமுக அலுவலகத்திற்கு செல்லப் போவதாக” முன்னதாக சசிகலா அறிவித்துள்ளது, அதிமுகவில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இப்படியான ஒரு குழப்பமான சூழலுக்கு மத்தியில் தான், அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 11 ஆம் தேதி மீண்டும் நடைபெறும் என்று,  அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதன் காரணமாக, ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் மாறிமாறி கருத்து யுத்தம் நடத்தி வருகின்றனர். 

இந்த சூழலுக்கு மத்தியில் தான் அதிமுக வின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது அம்மா’ ஆசிரியர் பொறுப்பில் இருந்து அதன் ஆசிரியர் மருது அழகுராஜ், கடந்த சில நாட்களுக்கு முன்பு விலகினார். 

இதனையடுத்து, “அதிமுக பொதுக் குழுவில் எடப்பாடி தரப்பு ஓ.பன்னீர்செல்வத்தை திட்டமிட்டு அவமானப்படுத்தியதாக” மருது அழகுராஜ் குற்றஞ்சாட்டினார். 

குறிப்பாக, “எங்கு பார்த்தாலும் அடியாட்கள்.. இப்படியொரு பொதுக் குழுவை பார்த்ததேயில்லை” என்று, 'நமது அம்மா நாளிதழ்' முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த பேட்டி, அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தான், சென்னை பட்டினப்பாக்கத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சற்று முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த நிலையில், “பொதுக்குழு உறுப்பினர்களை அவமானப்படுத்தும் வகையில் மருது அழகுராஜ் செயல்பட்டு வருகிறார்” என்று, பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

அத்துடன், “அதிமுக கட்சி விரோத நடவடிக்கைகளில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபடுகிறார் என்றும், ஓ.பன்னீர்செல்வம் பக்கம் 'நமது அம்மா' நாளிதழ் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் சாய்ந்துள்ளார்” என்றும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

மேலும், “சட்ட திட்டங்களின் படி அதிமுக பொதுக்குழு முறையாக நடைபெற்று” என்றும், ஜெயக்குமார் உறுதிப்படத் தெரிவித்தார்.

அதே போல், “கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை எடப்பாடி பழனிசாமி விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுத்தவர் என்றும், அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி வரும் 11 ஆம் தேதி நடைபெறும்” என்றும், ஜெயக்குமார் கூறினார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த பேட்டி, தற்போது அதிமுகவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.