தந்தையே மகளை 2 வருடமாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் 35 வயது தந்தை, தனது 14 வயது மகளைக் கடந்த 2 ஆண்டுகளாகத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகிறது. கணவன் - மனைவிக்குள் சண்டை வந்து, அவருடைய மனைவி கடந்த 2 ஆண்டுகளாகப் பிரிந்து சென்றுள்ளார். இந்நிலையில், அவருடைய 14 வயது மகள், கடந்த 2 ஆண்டுகளாகத் தந்தையுடன் வளர்ந்து வருகிறார்.

Vishakapatnam father sexual assault daughter

அந்த மாணவி விசாகப்பட்டினத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை, தினசரி கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், மனைவியைப் பிரிந்த ஏக்கத்தில் வாழ்ந்து வந்த கணவன், தன்னுடைய மகள் என்று கூட பாராமல், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து மகளைக் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு, பிரிந்து சென்ற மனைவி, மீண்டும் வந்து கணவனுடன் இணைந்து சேர்ந்து வாழத் தொடங்கினார். இந்நிலையில், மனைவி வெளியே சென்றிருந்த நேரத்தில், கணவன் தன்னுடைய 14 வயது மகளை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துகொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு நுழைந்த அவருடைய மனைவி, இதைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தார்.

Vishakapatnam father sexual assault daughter

இது தொடர்பாகக் கணவனிடம் சண்டை போடவும், அவர் வீட்டை விட்டு வெளியே ஓடிவிட்டார். இதனையடுத்து, மகளிடம் விசாரித்தபோது, கடந்த 2 ஆண்டுகளாகத் தனது தந்தை தன்னை கட்டாயப்படுத்தி, பாலியல் பலாத்காரம் செய்வதாகக் குறி அழுதுள்ளார். பின்னர் மனைவி அளித்த புகாரின் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் சிறுமியின் தந்தையைத் தேடி வருகின்றனர்.