தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி.தற்போது சங்கத்தமிழன்,லாபம்,VSP 33 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.பேட்ட,சூப்பர் டீலக்ஸ்,சிந்துபாத் என்று வரிசையாக சூப்பர்ஹிட் படங்களை ரிலீஸ் செய்துள்ளார்.
புறம்போக்கு என்னும் பொதுவுடைமை படத்தை அடுத்து விஜய்சேதுபதி இயக்குனர் SP ஜனநாதனுடன் இணைந்திருக்கும் படம் லாபம்.ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துளளார்.கலையரசன் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது இந்த படத்தில் பேராண்மை,கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்த சாய் தன்ஷிகா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.