தமிழ் திரையுலகில் சிறந்த இசையமைப்பாளராகவும், ரசிகர்கள் விரும்பும் நாயகனாகவும் அசத்தி வருபவர் விஜய் ஆண்டனி. கொலைகாரன், அக்னிச் சிறகுகள் படங்களைத் தொடர்ந்து தற்போது தமிழரசன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கிவருகிறார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். சோனு சூட் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

Vijay Antonys Tamizharasan Movie Teaser Vijay Antonys Tamizharasan Movie Teaser Vijay Antonys Tamizharasan Movie Teaser

இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி இந்த படத்தை தயாரிக்கிறார்.

Vijay Antonys Tamizharasan Movie Teaser Vijay Antonys Tamizharasan Movie Teaser

தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியானது. ஆக்ஷன் கலந்த இந்த டீஸர் இணையத்தை ஈர்த்து வாருகிறது. விஜய் ஆண்டனி கைவசம் அக்னிச் சிறகுகள், காக்கி டா போன்ற படங்கள் உள்ளது.