நடிகர் STR மற்றும் ப்ளூப்பர் புகழ் இயக்குனர் வெங்கட் பிரபு இணையும் படம் மாநாடு. இப்படத்திற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. எப்போதும் தனது எதார்தமான கருத்தை மைய்யமாக வைத்து படம் இயக்கி வரும் வெங்கட் பிரபு, இப்படத்தில் அரசியல் கலந்த கமர்ஷியல் கருத்தை கதையில் வைத்து எடுக்கவுள்ளார். 

maanadu

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. சபரிமலை பயணத்திற்கு பிறகு நீச்சல், உடற் பயிற்சி என ஸ்லிம்மாக மாறி வருகிறார் சிம்பு. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். ப்ரோடக்ஷன் டிசைனராக ராஜீவன் இடம்பெற்றுள்ளார். சில்வா ஸ்டண்ட் மாஸ்டராக உள்ளார். வாசுகி பாஸ்கர் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகிறார். கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தில் பாரதிராஜா, SA சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி ஆகியோர் உள்ளனர். ஆகஸ்ட் மாதம் வெளியாகும் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. 

maanaadu venkatprabhu

தற்போது இயக்குனர் வெங்கட்பிரபு STR ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ பதிவு செய்துள்ளார். மேலும் படத்தில் STR இஸ்லாமிய பாத்திரத்தில் நடிக்கவிருப்பதால், அந்த கேரக்டர் பெயரை ரசிகர்களே தேர்ந்தெடுக்கும் படி கேட்டுக்கொண்டார்.