தமிழகத்தில் உள்ள முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக குறுகிய காலத்தில் உருவெடுத்திருப்பது வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம்.2019-ல் LKG,கோமாளி,பப்பி என்று மூன்று சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளன.கோமாளி படம் மக்களிடம் அபார வரவேற்பை பெற்று இந்த வருடத்தின் மிகப்பெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

Vels Films Success Event To be Held on Nov 24th

இதனை கோலாகலமாக கொண்டாடும்படி வேல்ஸ் நிறுவனம் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஒரு வெற்றிவிழாவை ஏற்பாடு செய்துள்ளனர்.இந்த விழாவில் முக்கிய விருந்தினராக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளவுள்ளார்.

Vels Films Success Event To be Held on Nov 24th

இதனை தவிர வேல்ஸ் நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் படங்களானசீறு,சுமோ,ஜோஷுவா,மூக்குத்தி அம்மன் மற்றும் விநியோகஸ்தராக இருக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களின் முக்கிய அப்டேட்களை வெளியிடவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.இது தவிர சூர்யா-கெளதம் மேனன் படம் குறித்த அறிவிப்பும் இந்த விழாவில் வெளியாகும் என்று தெரிகிறது.