சின்னத்திரையில் தெய்வமகள் என்ற தொடரின் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் இதயத்துடிப்பாக மாறியவர் வாணி போஜன்.தற்போது வைபவ் நடிக்கும் படத்தின் நாயகியாக நடித்து வருகிறார்.இதையடுத்து இவர் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா தயாரிக்கும் Meeku Maathrame Cheptha என்று படத்தில் நடித்துள்ளார்.

Vani Bhojan As lead in Ashok Selvan Oh My Kadavule

இந்த படம் நவம்பர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது.தற்போது இவர் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.அசோக் செல்வன் , இறுதி சுற்று ரித்திகா சிங் நடிக்கும் ஓ மை கடவுளே படத்தை Axxess பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது.

Vani Bhojan As lead in Ashok Selvan Oh My Kadavule

அறிமுக இயக்குனர் அஸ்வந்த் மாரியப்பன் இந்த படத்தை இயக்குகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் மற்றுமொரு ஹீரோயினாக வாணி போஜன் நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Vani Bhojan As lead in Ashok Selvan Oh My Kadavule