இயக்குனர் ஜீத்து ஜோஸஃப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், நிகிலா விமல், இளவரசு, சௌகார் ஜானகி ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் தம்பி. பாபநாசம் வெற்றிக்கு பிறகு குடும்பத்தை அடித்தளமாய் கொண்டு களமிறங்கியுள்ளார் இயக்குனர். 

Thambi Movie Trimmed Due To Reviews

சந்தர்ப்ப சூழ்நிலையால் சிறு வயதில் தனது குடும்பத்தை விட்டு பிரியும் கார்த்தி, பதினைந்து வருடங்கள் கழித்து மீண்டும் குடும்பத்துடன் இணைகிறார். பொறுப்புள்ள அக்கா ஜோதிகாவின் தம்பியாக நுழையும் கார்த்தி அங்கு என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார் ? நிஜத்திலே அவர் தான் தம்பியா அல்லது அந்நியரா ? என்பது தான் இந்த படத்தின் கதைக்கரு. கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். 

Thambi Movie Trimmed Due To Reviews

படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வந்ததால், பத்து நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. 2 மணிநேரம் 19 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று டிசம்பர் 25ந்தேதி திரையிடப்பட்ட காட்சிகளில் பத்து நிமிடம் குறைக்கப்பட்டதாம். இதனால் படத்தின் வேகம் அதிகமாகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.