மதராசபட்டினம், கிரீடம், தாண்டவம், சைவம் போன்ற சீரான படைப்புகளை தந்தவர் இயக்குனர் விஜய். இறுதியாக பிரபுதேவா வைத்து தேவி 2 படத்தை இயக்கினார். தற்போது தலைவி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் கொண்ட வீடியோ வெளியாகி இணையத்தை அசத்தியது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று குறித்த படமாகும். 

thalaivi

இதில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் பாலிவுட் பிரபலம் கங்கனா ரனாவத் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு மணிகர்னிகா உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதிய கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு மதன் கார்கி பாடல்கள் எழுதுகிறார். 

aravindswamy arvindswamy aravindswamy aravindswamy

இதில் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். ஜனவரி 17-ம் தேதியான இன்று எம்.ஜி.ஆர் பிறந்த தினம் என்பதால், இதன் இரண்டாம் லுக் போஸ்டர் மற்றும் டீஸரும் வெளியானது. வெளியானது. ஜூன் மாதம் 26-ம் தேதி இப்படம் திரைக்கு வருமென்றும் கூறப்படுகிறது.