பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகியுள்ள தர்பார் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கியுள்ளார்.லைகா ப்ரொடுக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் பொங்கல் 2020க்கு வெளியாகவுள்ளது.

Thalaivar 168 First Schedule Wrapped Rajini Siva

இதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.தலைவர் 168 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கவுள்ளார்.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

Thalaivar 168 First Schedule Wrapped Rajini Siva

இந்த படத்தில் சதிஷ்,சூரி,கீர்த்தி சுரேஷ்,பிரகாஷ் ராஜ்,மீனா,குஷ்பூ உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பியுள்ளார்.இந்த புகைப்படங்களும்,வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Thalaivar 168 First Schedule Wrapped Rajini Siva