தாறுமாறாக தயாராகிறது ஹீரோ முதல் லுக் ! KJR-ன் பதிவு

Shah rukh khan about acting with thalapathy vijay in a new film varisu jawan pathaan | Galatta

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.தற்போது இவர் இன்று நேற்று நாளை இயக்குனர் ராம்குமாருடன் SK 14,இரும்புத்திரை இயக்குனர் PS மித்ரனுடன் ஹீரோ மற்றும் இயக்குனர் பாண்டிராஜுடன் SK 16 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ஹீரோ படத்தினை இரும்புத்திரை படத்தின் இயக்குனர் P.S.மித்ரன் இயக்குகிறார்.இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.KJR ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

பாலிவுட் ஹீரோ அபாய் தியோல்,ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் நாச்சியார் பட நாயகி இவானா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் Firstlook போஸ்டர் வெகு விரைவில் வெளியாகும் என்று KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.இதனை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.