7 படத்தில் ரெஜினாவின் ரொமான்டிக் பாடல் வீடியோ !
By Aravind Selvam | Galatta | August 08, 2019 12:19 PM IST

ஸ்ரீ க்ரீன் productions தயாரிப்பில் உருவாகி வரும் படம் 7.திரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தினை நிசார் ஷபி இயக்குகிறார்.ரஹ்மான் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.ரமேஷ் வர்மா கதை திரைக்கதை எழுத ,சைத்தன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.
ஹவிஸ்,ரெஜினா cassandra,நந்திதா ஸ்வேதா,அனிஷா அம்ப்ரோஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் Firstlook வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.
விறுவிறுப்பாக இருக்கும் இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஜூன் 5ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் ரொமான்டிக் பாடல் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.