தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.தற்போது ஹீரோ படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.இதனை அடுத்து SK ப்ரொடுக்ஷன்ஸுடன் இணைந்து KJR நிறுவனம் தயாரிக்கும் டாக்டர் படத்தில் ஹீரோவாக  நடிக்கிறார்.

Priyanka Mohan Heroine For Sivakarthikeyan Doctor

சிவகார்த்திகேயனின் நீண்ட கால நண்பரும்,கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனருமான நெல்சன் இந்த படத்தை இயக்குகிறார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் டிசம்பர் 6ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Priyanka Mohan Heroine For Sivakarthikeyan Doctor

இந்த படத்தில் வினய்,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.இந்த படத்தின் நாயகியாக தெலுங்கு கேங் லீடர் படத்தில் நடித்த ப்ரியங்கா மோகன் நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.