சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. தற்போது புதுப்பொலிவுடன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதில் சசிகுமாருடன், அஞ்சலி, அதுல்யா, பரணி ஆகியோர் நடித்துள்ளார். நந்தகோபால் இந்த படத்தை தயாரித்துள்ளார். 

Naadodigal 2 Censor Update

நாடோடிகள் இரண்டாம் பாகத்தின் டீஸர் வெளியாகி பட்டையை கிளப்பியது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Naadodigal 2 Censor Update Naadodigal 2 Censor Update

தற்போது படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. முதற் பாகம் போலவே இந்த படமும் வெற்றி பெற கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம். சசிகுமார் கைவசம் எம்.ஜி.ஆர் மகன், பரமகுரு, கொம்புவச்ச சிங்கம்டா போன்ற படங்கள் திரைக்கு வரவிருக்கிறது.