90'ஸ் மற்றும் 2000'ஸ் காலங்களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக விளங்கியவர் மீனா.சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,உலகநாயகன் கமல்ஹாசன்,தல அஜித் என கிட்டத்தட்ட அனைத்து ஹீரோக்களுடனும் ஜோடி போட்டவர்.திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

இவர் தமிழில் கடைசியாக நடித்திருந்த திரைப்படம் 2011-ல் நரேன் நடிப்பில் வெளியான தம்பிக்கோட்டை.தற்போது இவர் மீண்டும் தமிழ் ரசிகர்களுக்காக ஒரு புதிய வெப் சீரிஸில் நடிக்கப்போகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Trendloud தயாரிக்கும் இந்த வெப் சீரிஸை அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர் படத்தை இயக்கிவரும் விவேக் இயக்குகிறார்.இந்த சீரிஸுக்கு கரோலின் காமாட்சி என்று பெயரிட்டுள்ளனர்.இந்த சீரிஸின் ஷூட்டிங் இன்று ஒரு பூஜையுடன் துவங்கியுள்ளது.