முன்தினம் பார்த்தேனே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மகிழ் திருமேனி.தடையற தாக்க,மீகாமன் போன்ற வித்தியாசமான படங்களின் மூலம் ரசிகர்களிடம் சிறந்த இயக்குனர் என்ற நற்பெயரை சம்பாதித்தார்.

Magizh Thirumeni Signs Two Film Deal Screen Scene

கடைசியாக அருண் விஜய் நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளியான தடம் படம் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து விஜய்சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

Magizh Thirumeni Signs Two Film Deal Screen Scene

தற்போது இவருடன் ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இரண்டு படத்திற்கான ஒப்பந்தம் செய்துள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.உதயநிதியிடம் மகிழ் திருமேனி கூட்டணி அமைதப்பாக இருந்த படமாக இருக்கலாம் என்றும்.ஜெயம்ரவி ஏற்கனவே ஸ்க்ரீன் சீன் நிறுவனத்துடன் மூன்று பட ஒப்பந்தம் செய்துள்ளார் எனவே மகிழ் திருமேனி இயக்கும் இரண்டாவது படத்தில் ஜெயம் ரவி நடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Magizh Thirumeni Signs Two Film Deal Screen Scene