சுந்தரபாண்டியன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். 2012ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. இப்படத்தை தொடர்ந்து, இது கதிர்வேலன் காதல், சத்ரியன் ஆகிய படங்களை இயக்கி இருந்தார். தற்போது கொம்பு வச்ச சிங்கம்டா படத்தை இயக்கியுள்ளார். 

sasikumar

சசிகுமார் - மடோனா செபஸ்டியன் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன்.டி.வி. நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

kombuvachasingamda

தற்போது இந்த படம் ஏப்ரல் 2020 வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது. சசிகுமார் கைவசம் நாடோடிகள் 2, எம்.ஜி.ஆர் மகன் போன்ற படங்கள் உள்ளது.