ஆதரவளித்த நல்லுள்ளங்களுக்கு நன்றி ! கீர்த்தி சுரேஷின் உருக்கமான பதிவு
By Aravind Selvam | Galatta | November 17, 2019 14:43 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் படம் இவருக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்துள்ளது.
இதனை தொடர்ந்து இவர் தெலுங்கில் மிஸ் இந்தியா,ஹிந்தியில் மைதான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.நேற்று கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக அறிமுகமாகி 6 ஆண்டுகள் நிறைவடைந்தது.2013-ல் மலையாளத்தில் கீதாஞ்சலி என்ற படத்தின் மூலம் இவர் ஹீரோயினாக அறிமுகமானார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த கீர்த்தி சுரேஷ் 6 ஆண்டுகளுக்கு முன் ஒரு நடிகையாக ஆனேன்.தற்போது தரமான படைப்புகளில் நடித்து வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.தொடர்ந்து எனக்கு ஆதரவளித்து வரும் திரைத்துறையினர்,குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.இன்னும் நெடுந்தூரம் இந்த பயணம் தொடரும் அவர் தெரிவித்துள்ளார்.