சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 167-வது படத்தை AR முருகதாஸ் இயக்க உள்ளார். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். நயன்தாரா, யோகிபாபு பிரதீக், சுனில் ஷெட்டி, ஸ்ரீமன், நிவேதா தாமஸ், யோக்ராஜ் சிங் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கவுள்ளனர்.
பேட்ட படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்த நிஹாரிகா பசின் கான் இந்த படத்தில் காஸ்ட்டியூம் டிசைனராக பணியாற்ற உள்ளார். படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகியது. மிகவும் ஸ்டைலிஷாக உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள்.
தர்பார் படத்தின் படப்பிடிப்பு ஜெய்பூரில் நடந்து வருகிறது நாம் அறிந்தவையே. தற்போது மறைந்த முன்னணி நடிகரான தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேரன் ஆதித்யா ஷிவ் பிங்க் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ஏற்கனவே சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் 2.0 மற்றும் பேட்ட போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல். தலைமுறை தாண்டிய நடிகர் சூப்பர்ஸ்டார் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். தேங்காய் ஸ்ரீனிவாசனுடன் ரஜினி நிறைய படங்கள் நடித்துள்ளார்.