நீண்ட நேரம் செல்போன் பேசியதால் தாய் திட்டியதை அடுத்து 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை செங்குன்றம் அருகே உள்ள பம்மதுகுளம் ஈஸ்வரன் நகரைச் சேர்ந்த தாஸ் - சந்திரா தம்பதியினருக்கு, 14 வயதில் நீலாவதி என்ற மகள் இருந்தார். அவர், அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

Chennai girl suicide mother tells not to use phone

பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பிய மாணவி, நீண்ட நேரம் யாருடனோ, செல்போனில் பேசிக்கொண்டிருந்திருந்தார். இதனால், கோபமடைந்த அவரது தாயார் சந்திரா, மகளைக் கடுமையாகத் திட்டியதாகத் தெரிகிறது.

இதனையடுத்து, நீலாவதி அடுத்த நாள் பள்ளிக்குப் போகாமல் வீட்டிலேயே மனமுடைந்த காணப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இதனிடையே, வீட்டில் யாரும் இல்லாத நிலையில், வீட்டில் உள்ள மின் விசிறியில் நீலாவதி, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Chennai girl suicide mother tells not to use phone

பின்னர், வீடு திரும்பிய நீலாவதியின் பெற்றோர், மகள் தூக்கில் தொங்குவதைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக விரைந்து வந்த போலீசா்ா, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.