எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த படம் மான்ஸ்டர்.  இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ராதாமோகன் இயக்கும் பொம்மை படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் மற்றும் சாந்தினி நடிக்கிறார்கள். 

Bommai First Look Launch By Dhanush

காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். 2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் தெரியவந்தது. 

Bommai First Look Launch By Dhanush Bommai First Look Launch By Dhanush

படத்தின் நாயகியான பிரியா பவானி நடித்து வந்த காட்சிகள் முடிந்தது. சமீபத்தில் பெங்களூரில் படப்பிடிப்பு துவங்கி நடந்து வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. இதை நடிகர் தனுஷ் வெளியிட்டார். பொம்மையுடன் கைகோர்த்த படி நிற்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இதனால் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு கிடைத்துள்ளது. படத்தின் இசை விரைவில் வரும் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.