உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் இப்படத்திலும் கமல்ஹாசன் முதியவர் பாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இதில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், வித்யுத் ஜம்வால் போன்ற நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.

Bobby Simha Role In Indian 2

இந்தியன் படத்தில் இடம்பெற்ற சேனாபதி தோற்றம் இப்போதும் அவருக்கு கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ஷங்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் முதல் லுக் வெளியானது, சேனாபதியை மீண்டும் கண்ட ரசிகர்கள் தெம்புடன் வரவேற்றனர்.ரத்னவேல் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாக என்ற தகவல் சமீபத்தில் தெரியவந்தது. பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றுகிறார்.

Bobby Simha Role In Indian 2

படப்பிடிப்பு ராஜஸ்தானில் உள்ள அஜ்மர் பகுதியில் நடந்து வருகிறது. நடிகர் பாபி சிம்ஹா காவல் அதிகாரியாக நடிக்கிறார் என்ற செய்தி தெரியவந்தது. நேற்று படக்குழுவுடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார் பாபி சிம்ஹா.