தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது.இதனை அடுத்து இவர் மாநகரம்,கைதி உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகும் படத்தில் நடிவவிருக்கிறார்.

Bigil Kathir Tweets About Thalapathy 64 Poojai

இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.மாளவிகா மோகனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.சாந்தனு,ஆண்டனி வர்கிஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Bigil Kathir Tweets About Thalapathy 64 Poojai

அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் நேற்று தொடங்கியது.இதற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் கதிர் என்னுடைய நண்பர்கள் அனைவரும் அங்கு உள்ளனர் படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளனர்.