பிறந்த நாளில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணின் பிறந்த நாளை முன்னிட்டு, தன்னுடைய ஆண் நண்பர்களின் அழைப்பின் பேரில், மும்பை சென்றுள்ளார். அங்கு 4 ஆண் நண்பர்கள், அப்பெண்ணை அப்பகுதியில் உள்ள செம்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

Aurangabad girl raped at birthday celebrations

இதனையடுத்து, நள்ளிரவு 12 மணிக்கு அவர்கள் அனைவரும் சேர்ந்து பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இந்த கொண்டாட்டத்தின் உச்சமாக, அந்த பெண்ணை 4 பேரும் சேர்ந்து கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்து, பெண்ணை கசக்கிப் பிழிந்துள்ளனர்.

இந்த சம்வத்திற்குப் பின், அவுரங்காபாத் திரும்பிய அப்பெண் இயல்பாக இல்லாமல், ஒருவித பயத்துடன் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அப்பெண்ணிற்கு அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டுத் துடித்துள்ளார்.

Aurangabad girl raped at birthday celebrations

இதனையடுத்து, அப்பெண்ணை அவளது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது பரிசோதித்த மருத்துவர்கள், அப்பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி உள்ளதாகத் தெரிவித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் பெற்றோர்கள், பெண்ணிடம் நடந்ததைக் கேட்டுள்ளனர். அவளும், தான் பாலியல் பலாத்காரத்திற்குச் செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.

பின்னர், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், பெண்ணின் 4 ஆண் நண்பர்களையும் தேடி வந்தனர். இதனிடையே, உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் உடல் நிலை மேலும் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று அவர் உயிரிழந்தார்.

Aurangabad girl raped at birthday celebrations

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி பெண்கள், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.