தமிழ் திரையுலகில் சீரான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் அட்டக்கத்தி தினேஷ். கடைசியாக அதியன் ஆதிரை இயக்கிய இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தில் நடித்து அசத்தினார். 

attakathidinesh

தற்போது இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கும் புதிய படத்தில் அட்டக்கத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் அருள்தாஸ் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார். நான் மகான் அல்ல, தென்மேற்கு பருவகாற்று, சூதுகவ்வும், தர்மதுரை, காலா போன்ற படங்களில் நடிப்பில் அசத்திய அருள்தாஸ் தயாரிப்பாளராக கால் பதிக்கும் படம் இதுதான். 

vikramsukumaran

அட்டக்கத்தி தினேஷ் கைவசம் வாராயோ வெண்ணிலாவே, பல்லு படாம பாத்துக்கோ, நானும் சிங்கிள் தான் போன்ற படங்கள் ரிலீஸ் பட்டியலில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் ரஞ்சித் இயக்கும் சல்பேட்டா படத்தில் தினேஷ் இருப்பதாக கூறப்படுகிறது.