அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான 100 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடித்து வருகிறார். பிரேமம் புகழ் அனுபமா ஜோடி சேர்ந்து நடித்து வரும் திரைப்படத்தில் நடிகர் அமிதாஷ் பிரதான் முக்கிய ரோலில் நடிக்கிறார். 

Atharvaa Anupama Movie Shooting At Azerbaijan

மசாலா பிக்ஸ் மற்றும் எம்கேஆர்பி புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஷண்முக சுந்தரம் காட்சிகள் அமைத்துள்ளார். கபிலன் வைரமுத்து வசனம் எழுதியுள்ளார். இந்த படத்தின் டைட்டில் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

Atharvaa Anupama Movie Shooting At Azerbaijan Atharvaa Anupama Movie Shooting At Azerbaijan

தற்போது இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு அசர்பைஜானில் நடைபெற்று வந்தது. வரும் ஜனவரி 23-ம் தேதியுடன் இந்த படப்பிடிப்பு முடியவுள்ளதாக இயக்குனர் பதிவு செய்துள்ளார். விரைவில் இப்படம் குறித்த அப்டேட்டுகளை அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.