அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் நடித்துள்ள படம் ‘ஓ மை கடவுளே’. மேலும் இந்தப் படத்தில் பிரபல டிவி நடிகை வாணி போஜனும் இணைந்திருந்தார். இவர்களுடன் கௌரவ கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

Ashok Selvans Twitter Dare About Vani Bhojan

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. லியோன் ஜேம்ஸ் இசையில் படத்தின் பாடல்கள் சிறப்பாக வந்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. விது அய்யனா ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.

Ashok Selvans Twitter Dare About Vani Bhojan

Ashok Selvans Twitter Dare About Vani Bhojan

Ashok Selvans Twitter Dare About Vani Bhojan

தற்போது ட்விட்டரில், வாணி போஜன் மிகவும் அழகாக இருக்கிறார் என்று அஷோக் செல்வன் பதிவு செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து, தீபாவளிக்காக பிரபல தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சிக்காக இதுபோல் பதிவு செய்தேன் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல், வாணி போஜனும் தனது ட்விட்டர் பதிவில் அஷோக் செல்வன் குறித்து பேசியுள்ளார். இச்செய்தி அறிந்த ரசிகர்கள், இதுவும் ஒரு வகையான விளம்பரம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Ashok Selvans Twitter Dare About Vani Bhojan