தமிழ் சினிமாவில் பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றி கண்டவர் நடிகர் அருண் விஜய்.தனது செகண்ட் இன்னிங்ஸில் தொட்டதெல்லாம் வெற்றியாக இவருக்கு அமைந்து வருகிறது.மாஃபியா,பாக்ஸர்,அக்னி சிறகுகள் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

Arun Vijay Sinam Movie First Look Poster Released

இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் படத்தை ஹரிதாஸ் படத்தை இயக்கிய GNR குமரவேலன் இயக்குகிறார்.குப்பத்து ராஜா,சிக்ஸர் உள்ளிட்ட படங்களில் நடித்த Palak Lalwani இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தில் அருண் விஜய் போலீசாக நடித்து வருகிறார்.

Arun Vijay Sinam Movie First Look Poster Released

இந்த படத்திற்கு சினம் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் அருண் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.