தமிழ் திரையுலகின் ராக்ஸ்டார் என்றால் உடனே நினைவுக்கு வருபவர் அனிருத். ஆறிலிருந்து அறுபது வரை உள்ள ரசிகர்களை தன் இசையால் கட்டி ஈர்க்கும் உன்னத கலைஞன். 3 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், தற்போது ஒரே நேரத்தில் மூன்று உச்ச நட்சத்திரங்களின் படத்தின் கம்போசிங்கில் பிஸியாக இருக்கிறார் என்றால் அது அவரின் திறமைக்கான அங்கீகாரம். 

Anirudhs Christmas Treat For Fans

சமீபத்தில் அனிருத் இசையில் தர்பார் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தை லைக்கா தயாரிப்பு நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படம் வருகிற 2020 பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது. 

Anirudhs Christmas Treat For Fans

அதுமட்டுமல்லாமல் அனிருத் கைவசம் தளபதி 64 மற்றும் இந்தியன் 2 போன்ற படங்கள் உள்ளன. இந்நிலையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் நாள் ஸ்பெஷலாக ஜிங்கிள் பெல் பாடலை பாடி அசத்தியுள்ளார். அனிருத்துடன் இணைந்து அவரது நண்பர்களான அர்ஜூன் சாண்டி மற்றும் சஜித் சத்யா தெறிக்க விடுகின்றனர்.