நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், மானாட மயிலாட ஷோவின் நடனக் கலைஞராகவும் பிரபலமாகியவர் நடிகர் மனோ. தீபாவளியன்று மனைவியுடன் அம்பத்தூர் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது, கார் மோதி விபத்துக்குள்ளானதால் சம்பவ இடத்திலேயே மனோ உயிரிழந்தார்.

Actor Mano Died In Accident

புழல் படத்தில் மூன்று நாயகர்களில் ஒருவராக நடித்து திரையுலகிற்கு அறிமுகமானவர் மனோ. படங்களில் நடித்துக் கொண்டே மேடை நிகழ்ச்சிகளும் பங்கேற்று வந்தார் மனோ. உயிருக்குப் போராடிய அவரது மனைவியை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Actor Mano Died In Accident

மனோ - லிவியா தம்பதியினருக்கு 5 வயது மகள் இருப்பது தெரியவந்தது. இந்நிகழ்வு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனோவின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.