மார்க்கெட் ராஜா படத்தின் ட்ரைலர் வெளியானது
By Sakthi Priyan | Galatta | September 24, 2019 13:00 PM IST

பிக்பாஸ் முதல் சீசன் டைட்டில் வின்னரான ஆரவ் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் மார்க்கெட் ராஜா MBBS. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ஈர்த்து வருகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சரண் இயக்கியுள்ளார். இவர் அஜித் நடித்த அமர்க்களம், அட்டகாசம், அசல் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காவியா தபார், ராதிகா, நாசர், ரோகினி, சாயாஜி ஷிண்டே, பிரதீப், ஹரிஷ் பாண்டே, ஆதித்யா மேனன், நிகிஷா பட்டேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குகன் ஒளிப்பதிவில் சைமன்கிங் இசையில் கோபிகிருஷ்ணா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சுரபி பிலிம்ஸ் நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர்.
அதிரடி ஆக்ஷன் மற்றும் திகில் நிறைந்த இந்த படத்தின் ட்ரைலரை பார்க்கையில் ஆரவிற்கு நல்ல பெயரை சம்பாதித்து தரும் என்று கூறினால் அது மிகையாகாது.
Super exciting update on Vishal - Arya's Enemy - Producer makes fans happy!
10/04/2021 06:26 PM
Leela Samson onboard for this star actor's comeback film - big announcement!
10/04/2021 05:00 PM