மிருகம் படம் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகர் ஆதி. அதைத்தொடர்ந்து ஈரம், அரவான், கோச்சடையான், மரகதநாணயம் போன்ற வெற்றி படங்களில் நடித்து அசத்தினார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் இவர் தற்போது கிளாப் என்ற படத்தில் நடித்துள்ளார். 

Aadhis Clap Movie Motion Poster

இப்படத்தில் தடகள வீரராக நடிக்கிறார் ஆதி. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகி வருகின்றது. கதாநாயகியாக ஆகன்ஷ்கா சிங் நடிக்கிறார். இப்படத்தின் வாயிலாக பிருத்வி ஆதித்யா இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். 

Aadhis Clap Movie Motion Poster

சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் இணையத்தை அசத்தியது. தற்போது இதன் மோஷன் போஸ்டர் வெளியானது.