கள்ளக் காதலியுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த 7 வயது சிறுமியை கொன்று வீசிய கொடூர மாமா!

கள்ளக் காதலியுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த 7 வயது சிறுமியை கொன்று வீசிய கொடூர மாமா! - Daily news

கள்ளக் காதலியுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த 7 வயது சிறுமியை சொந்த மாமாவே கொடூரமாக கொன்று வீசிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசூர் மாவட்டத்தில் தான் இப்படி கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.

பாலசூர் மாவட்டத்தில் உள்ள பலியாபால் காவல் எல்லைக்குட்பட்ட சுந்தர்கோய்லி கிராமத்தில் 7 வயது சிறுமி ஒருவர், தனது மாமாவின் வீட்டில் தங்கிப் படித்து வந்தார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுடன் சிறுமியின் மாமா தீபக், திருமண பந்தத்தை மீறிய உறவில் இருந்து வந்ததை அந்த சிறுமி தற்செயலாகப் பார்த்து உள்ளார். சிறுமி, நேரடியாக பார்த்தை, கள்ள உறவில் இருந்த மாமா தீபக்கும் சிறுமி பார்த்ததை பார்த்து உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த தீபாக், இந்த விவகாரத்தைச் சிறுமி வெளியே சொல்லி விடுவாளோ என்று பயந்து உள்ளார். அந்த அச்சம் காரணமாக, சிறிதும் யோசிக்காத தீபாக், அந்த சிறுமி தனியாக அழைத்து கள்ளக் காதல் உறவில் இருந்த பெண்ணுடன் சேர்ந்து துளியும் இறக்கம் இல்லாமல் அந்த 7 வயது சிறுமியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்து உள்ளனர். 

அதன் பிறகு, சிறுமியின் சடலத்தை அங்குள்ள ஒரு குளத்தின் அருகே இருக்கும் ஒரு புதரில் வீசி சென்றுள்ளார். இதனையடுத்து, சிறுமியின் மாமா தீபாக், எதுவும் நடக்காதது போல் இருந்துள்ளார்.

ஆனால், சிறுமி வெகு நேரமாக காணவில்லை என்பதால், அவரை தேடுவது போல் தீபாக தேடிப் பார்த்துவிட்டு, சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதனால், பதறிப்போன சிறுமியின் பெற்றோர், அங்கு வந்து சிறுமியை தேடிப் பார்த்து உள்ளனர். அப்போது, சிறுமியின் பெற்றோருடன் எதுவுமே தெரியாதது போல் தீபாக்கும் சிறுமியை தேடி அலைந்து உள்ளார். 

அதன் தொடர்ச்சியாகவே, சிறுமியை காணவில்லை என்று, அங்குள்ள காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறுமியின் சடலமானது, கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள ஒரு புதரில் இருந்து மீட்கப்பட்டது. இதனால், அந்த உடலை மீட்டு போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சிறுமி மாயமான வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது. 

விசாரணையில், அந்த 7 வயது சிறுமியை, அவருடைய மாமா தீபக் தான் கொடூரமாக கொலை செய்து தெரிய வந்தது. அத்துடன், அதே பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன பெண்ணுடன் கள்ளக் காதலில் இருந்ததும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. 

இதனால், சம்மந்தப்பட்ட இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இது தொடர்பாக மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது.

Leave a Comment