உலக அளவில் உணவுப் பொருட்களில் பூண்டு ஒரு முக்கிய பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுவை, நறுமணம் தாண்டி பல மருத்துவ குணங்கள் பூண்டுக்கு உண்டு. இதனால் தான் சமையலுக்கும் மட்டும் இல்லாமல்  மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.


பூண்டில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளது. இது உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. கபத்தை தடுக்கிறது. பெரும்பாலும் வீடுகளில் ஜலதோஷம் இருந்தாலோ அஜீரண கோளாறு இருந்தாலோ பூண்டை பயன்படுத்துவார்கள். ஆனால் உணவில் பூண்டு சேர்த்தால் நுரையீரலில் தொற்றுநோயைத் தடுக்கிறது.

இதில் இருக்கும் சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸின்  என்ற வேதிப்பொருள் நுரையீரல் தொற்றுநோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாவைக் அழிக்கிறது. புதிய பூண்டில் அல்சின் இருக்கிறது. மலேரியா, யானைக்கால், காசநோய்க் போன்றவற்றிக்கு எதிராக செயலாற்றி மற்றும் கொழுப்பைக் குறைக்கவும், இதய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.

மாரடைப்பு , பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.  இதில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன. 
வெறும் வயிற்றில் பச்சையாக பூண்டு சாப்பிட்டால் உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். பச்சையாக பூண்டு சாப்பிடும் போது கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும்.


இவ்வாறு பூண்டை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக  சாப்பிட்டால், உடம்பில் உள்ள ஆன்ஜியோடென்சின் என்னும் ஹார்மோன் உற்பத்தியைத் தடுத்து, ரத்த நாளங்களை சரி செய்கிறது.  பச்சையாக சாப்பிடுவதால் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். அதுவும் உடலில் கொப்புளங்கள், தலை வலி போன்றவை ஏற்பட்டால்  பூண்டை பச்சையாக சாப்பிடுவதை நிறுத்திவிட்டு மருத்துவரை அணுகுங்கள்.