ஃபேர்னெஸ் க்ரீம் எல்லாம் அவுட் டேட்டட். பிபி மற்றும் சிசி க்ரீம் தான் இப்போது ட்ரெண்ட். கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் பெண்களில் பலருக்கு, எப்பொழுது எந்த வகையான க்ரீம் தேர்வு செய்ய வேண்டும் என  சந்தேகம் இருக்கும். மேலும் ஒவ்வொருவரின் சரும தன்மையைப் பொறுத்து மற்றும் செல்லும் இடத்துக்கு ஏற்ப பிபி மற்றும் சிசி க்ரீம்களை பயன்படுத்தனால் பொருத்தமாக இருக்கும். 


சிசி க்ரீம்
லைட்’டான லோஷன் போன்ற தன்மையுடையது தான் இந்த க்ரீம் என்றாலும் சருமத்துக்கு மேக்கப் போட்டது போன்ற தோற்றத்தையே தரும். ப்ளாக் ஸ்பாட், வடுக்களை மறைந்து சருமத்தை ஒரே சீரான நிறத்துடன், மென்மையாகவும் காட்டுகிறது. இதை தொடர்ந்து பயன்படுத்தி வரும் நிலையில் சருமத்தில் இருக்கும் பிரச்சனைகளை நிரந்தரமாகச் சரிசெய்யும். எதாவது ஸ்பெஷல் ஈவண்ட்ஸின் போது, இந்த சிசி க்ரீம் தேர்வு செய்தால் பொருத்தமாக இருக்கும். 


பிபி க்ரீம்
இது திக்’கான க்ரீம்  என்பதால் ஈரப்பதம் அளிக்கும் மாய்ஸ்சரைசர் மற்றும் சருமத்தின் சுருக்கங்கள் மறைத்து சீராகக் காட்டும்.  மாய்ஸ்சரைசர் மற்றும் பிரைமர் இரண்டின் வேலையையும் இந்த க்ரீம் செய்யும். மேலும் நோ மேக்கப் தோற்றத்தையும் அளிக்கிறது. 
மேலும் பொலிவான தோற்றத்தை தருவதுடன் சருமத்தைப் பாதிப்படையாமலும் பாதுகாக்கிறது. கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் போது இதை தேர்வு செய்யலாம்.