துப்பாக்கி முனையில் இளம் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கிராம பஞ்சாயத்து உறுப்பினரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர்.

பெங்களூரு அருகே தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பெங்களூரு புறநகர் பகுதியான ஆனேக்கல் தாலுகா பன்னரகட்டாவில் உள்ள காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிலவரஹள்ளியை சேர்ந்த அகமது பாஷா என்பவர், பிலவரஹள்ளி கிராம பஞ்சாயத்து உறுப்பினராக இருந்து வருகிறார்.

அது போல், பெங்களூரு ஹெப்பாலை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன், அகமது பாஷாவுக்கும், ஃபேஸ்புக் மூலம் அறிமுகம் ஆகி பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால், அவர்கள் 2 பேரும் தங்களது செல்போன் எண்களைப் பரிமாறிக் கொண்டு பேசி, மிகவும் நெருக்கமாகப் பேசி வந்ததாகத் தெரிகிறது.

அப்போது அகமது பாஷா, அந்த இளம் பெண்ணிடம் “நான் கவுன்சிலர்” என்று, பில்டப் கொடுத்திருக்கிறார். இதனை அந்த இளம் பெண்ணும் நம்பி உள்ளார்.

அத்துடன், அந்த இளம் பெண், “எனக்கு மாடலிங் துறையில் பணியாற்ற ஆசை” என்று, அகமது பாஷாவிடம் கூறியுள்ளார். 

அதற்கு அவர் “எனக்கு மாடலிங் துறையை சேர்ந்த பலரை தெரியும் என்றும், மாடலிங் துறையில் பணியாற்ற உதவி செய்வதாகவும்” அந்த இளம் பெண்ணிடம், அகமது பாஷா உறுதி அளித்திருக்கிறார்.

இப்படியான சூழ்நிலையில், நேற்று முன்தினம் இளம் பெண்ணை தொடர்பு கொண்டு பேசிய அகமது பாஷா, “மாடலிங் துறையில் வேலை வாங்கி தருவது தொடர்பாக பேச வேண்டும். அதனால், நீ என்னுடைய வீட்டிற்கு வா” என்று, அழைத்திருக்கிறார்.

இதனை நம்பிய அந்த இளம் பெண்ணும், அகமது பாஷா வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த அகமது பாஷா, அந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. 

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண், சத்தம் போட்டு கூச்சலிட்டு உள்ளார். அப்போது, காம மோகத்தில் தனது வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து இளம் பெண்ணை சுட்டு விடுவதாக அகமது பாஷா மிரட்டி உள்ளார். 

அதன் பிறகு, துப்பாக்கி முனையில் அந்த இளம் பெண்ணை அகமது பாஷா பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். 

குறிப்பாக, பாலியல் பலாத்காரம் செய்த பிறகு, அந்த இளம் பெண்ணை நிர்வாணப்படுத்திய அகமது பாஷா, அந்த பெண்ணை நிர்வாண கோலத்தில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு “இந்த பலாத்காரம் சம்பவம் குறித்து வெளியே சொன்னால், இந்த ஆபாசப் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பரவிவிடுவேன்” என்று, மிரட்டி அந்த பெண்ணை அனுப்பி வைத்து உள்ளார்.

எனினும், அவரது மிரட்டலுக்கு துளியும் அஞ்சாத அந்த இளம் பெண், நடந்த சம்பவம் பற்றி அங்குள்ள பன்னரகட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

இந்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அகமது பாஷாவை அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடம் தற்போது போலீசார் தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றனர். 

இதனிடையே. “ இளம் பெண்கள் மற்றும் 10 க்கும் மேற்பட்ட சிறுமிகளை அகமது பாஷா பாலியல் பலாத்காரம் செய்ததாகவும்” தகவல்கள் தற்போது வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.