வேலை கேட்டு இன்டர்வ்யூவுக்கு வந்த பெண்ணை நிறுவனத்தின் முதலாளி உட்பட 4 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும்
அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் பகுதியில் “எம்பி ஆன்லைன் கியோஸ்க்” என்ற பெயரில் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தை 51 வயதான சையத் யாகூப் அலி கான், 31 வயதான முகமது அப்ரார் கான் ஆகிய இருவரும் நடத்தி வருகின்றனர். 

அத்துடன், இந்த “எம்பி ஆன்லைன் கியோஸ்க்” என்ற நிறுவனத்தில் 40 வயதான முகமது ரஹ்மான், 29 வயதான ஷாரிக் கான் உள்ளிட்டோரும் அங்கு பணியாற்றி
வருகின்றனர். 

சம்மந்தப்பட்ட இந்த 4 பேரும் சேர்ந்து போபாலில் உள்ள ஆரிப் நகர் பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்த நிறுவனமானது,  ஆன்லைனில் கல்வி மற்றும் வேலை வாங்கி கொடுக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது.
 
இந்த சூழலில் தான், சம்மந்தப்பட்ட இந்த நிறுவனத்தில் அதே பகுதியில் வசிக்கும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த 23 வயதான இளம் பெண் ஒருவர், வேலை
கேட்டு அந்த நிறுவனத்தின் யாகூப் கான் என்பவரிடம், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பெண் பேசியிருக்கிறார்.

அவரும் அடுத்த நாள் அலுவலகத்திற்கு நேரில் வரச்சொல்லியிருக்கிறார். இதன் படியே, அந்த பெண்ணும் இன்டர்வ்யூவுக்கு சேலையெல்லாம் கட்டிக்கொண்டு
வந்திருக்கிறார்.

அப்போது, அந்த பெண் அந்த அலுவலத்தில் உள்ளே நுழைந்ததும், அந்த அலுவலத்தில் பணியாற்றி வந்த குறிப்பிட்ட அந்த 4 பேரும் சேர்ந்து அந்த இளம்
பெண்ணை பலவந்தமாக கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர், அந்த பெண்ணுக்கு அவர்கள் பணம் கொடுத்து, இந்த விசயத்தை வெளியே கூற வேண்டாம் என்று சொல்லி மிக கடுமையாக மிரட்டி உள்ளனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அங்குள்ள காவல் நிலையத்திற்கு நேராக சென்று புகார் அளித்து உள்ளார். புகாரின் பேரில் சம்மந்தப்பட்ட 4 பேர் மீதும்
வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.