கட்சிக்கார பெண்ணை, கட்சி கூட்டத்திற்கு வரச் சொல்லி அதே கட்சியைச் சேர்ந்த 2 பேர் சேர்ந்து காரில் வைத்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டம் திருவல்லா பகுதியைச் சேர்ந்த 44 வயதான சஜி மோன் என்ற நபர், அங்குள்ள ஒரு கட்சியில் கிளை செயலாளராக செயல்பட்டு வருகிறார்.

அதே போல், அதே கட்சியில் இளம் பெண் ஒருவர், முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார்.

இப்படியான சூழ்நிலையில், அந்த இளம் பெண்ணிடம் அக்கட்சியின் கிளை செயலாளர் சஜி மோன் மற்றும் நாசர் ஆகிய 2 பேரும், அடிக்கடி கட்சி விஷயமாக சந்தித்து பேசி வந்திருக்கிறார்கள். அந்த பெண்ணும், அவர்களுடன் கட்சி விஷயமாக அடிக்கடி ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.

இந்த சூழலில் தான் அந்த இளம் பெண்ணின் அழகில் சபலப்பட்ட சஜி மோன் மற்றும் நாசர் ஆகிய 2 பேரும், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மே மாதம் அக்கட்சியின் சார்பில் நடைபெற்ற ஒரு கூட்டத்திற்கு சஜி மோன் மற்றும் நாசர் ஆகிய 2 பேரும் சேர்ந்து, அந்த இளம் பெண்ணை ஒரு காரில் அழைத்துக்கொண்டு சென்றிருக்கின்றனர். 

அப்போது, அந்த கார் அந்த ரோட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்ற போது, அந்த இருவரும் சேர்ந்து அந்த இளம் பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த ஒரு ஜூஸை கொடுத்து உள்ளனர். 

இதனை வாங்கி குடித்த அந்த இளம் பெண், அந்த காரிலேயே அப்படியே மயங்கி இருக்கிறார். 

அப்போது, சிறுதும் தாமதிக்காத அந்த இருவரும், அந்த இளம் பெண்ணை அந்த காரில் வைத்தே தங்களது செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து வைத்துக்கொண்டு, அதன் தொடர்ச்சியாக அந்த இருவரும் சேர்ந்து அந்த இளம் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

இதனையடுத்து, அந்த இளம் பெண்ணின் ஆபாசப் படங்களை அவர்கள் இணையத்தில் வெளியிட்டனர். 

இந்த ஆபாச படங்களைப் பார்த்த பலரும், சம்மந்தப்பட்ட இளம் பெண்ணின் கவனத்திற்கு இதனை கொண்டு சென்ற நிலையில், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்மந்தப்பட்ட கட்சியின் கிளை செயலாளர் சஜி மோன், நாசர் உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனால், கேராளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.