முன்னாள் காதலனை பழி வாங்கத் திட்டம் போட்ட காதலி, காதலனின் வருங்கால மனைவியின் போட்டோவை ஆபாசமாக மாற்றி, அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குஜராத் மாநிலத்தில் தான், முன்னாள் காதலனைப் பழி வாங்க காதலி, திட்டம் போட்டிருக்கிறாள்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருக்கும் நரோடாவி பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளம் பெண் ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்த சூழலில், அந்த 23 வயதான இளம் பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரும் கடந்த 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்து உள்ளனர். இதனால், காதலர்களான இவர்கள் இருவரும், அந்த பகுதியின் பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்து, தங்களது காதலை மேலும் வளர்த்தனர். 

இப்படியாக, கடந்த 2 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், அந்த இளைஞர், தனது காதலை திடீரென துண்டித்துக்கொண்டார். ஆனால், அந்த பெண் தனது காதலனை எப்படியும் சம்மதிக்க வைக்க வேண்டும் என்று, விடாப்பிடியாகத் தனது காதலில் உறுதியாக இருந்து உள்ளார். ஆனால், அதற்கு, அந்த காதலன் மறுத்துவிட்டு, வேண்டும் என்றே சண்டைபோட்டு விட்டு, பிரிந்து சென்று விட்டார்.

இதனால், காதலன் மீது கடும் கோபம் அடைந்த அந்த காதலி, அவரை பழிவாங்க நேரம் பார்த்துக்கொண்டு இருந்து உள்ளார்.

இப்படியான சூழ்நிலையில் தான், அந்த காதலனுக்கு அவரது பெற்றோர் வேறொரு இடத்தில் ஒரு பெண் பார்த்து, திருமணம் நிச்சயம் செய்து உள்ளனர்.

இதனையடுத்து, அந்த பழைய காதலிக்கு இந்த விசயம் தெரிந்து, அவர் இன்னும் கோபமும் எரிச்சலும் அடைந்து உள்ளனர்.

இதனால், தனது முன்னாள் காதலனைப் பழிவாங்க நினைத்த அந்த முன்னாள் காதலி, தன்னுடைய காதலனின் வருங்கால மனைவியின் போட்டோவை சமூக ஊடகத்திலிருந்து எடுத்து, அந்த போட்டோவை ஆபாசமாக மாற்றி அதனை, அந்த பெண்ணுக்கே அனுப்பி வைத்து உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்து பதறிப்போன அந்த வருங்கால மனைவி, இது குறித்து தன்னுடைய வருங்கால கணவரிடம் கூறி அழுதிருக்கிறார்.

இதனால், இதனைப் பார்த்து அவரும் கடும் அதிர்ச்சியடைந்து, இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சைபர் க்ரைம் உதவியுடன் சாதாரண போட்டோவை ஆபாச படமாக மாற்றிய அந்த பெண்ணை கண்டுபிடித்து, அவரை பற்றி தீவிரமாக விசாரித்து உள்ளனர். 

அப்போது, இவற்றையெல்லாம் செய்தது, சம்மந்தப்பட்ட இளைஞனின் முன்னாள் காதலி தான் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, அந்த பெண்ணை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அத்துடன், இது தொடர்பாக அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.