பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட மோதலில் ஆத்திரமடைந்த நபர், பெண்ணை ஆசிட் குடிக்க வைத்து, கத்தியால் குத்திய கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் காசிம்பூர் பகுதியைச் சேர்ந்த சத்யேந்திர சிங் என்பவர், தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் பெண்ணிடம் அடிக்டகி மோதல் போக்கில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்த மோதல் போக்கு கடந்த பால ஆண்டுகளாகவே தொடர்ந்துகொண்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சத்யேந்திர சிங்கிற்கும், பக்கத்து வீட்டு பெண்ணுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், கடும் ஆத்திரமடைந்த சத்யேந்திர சிங், அந்த பெண்ணை வீட்டில் இருந்த ஆசிட்டை குடிக்க வைத்து, மிக கடுமையாகக் கொடுமைப்படுத்தி உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, உச்சக்கட்டமாக அந்த பெண்ணை கத்தியால் குத்தி மிக கொடூரமான முறையில் குத்தி உள்ளார். இதில், அவர் கடும் அலறல் சத்தத்துடன் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். 

அப்போது, அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து கடும் அதிர்ச்சியடைந்து, உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அத்துடன், அந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, கொலை செய்த பக்கத்து வீட்டு நபரை கைது செய்தனர். 

மேலும், இது தொடர்பாக கொலைக்கான காரணம் குறித்து அந்த பக்கத்து வீட்டு நபரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட மோதலில் ஆத்திரமடைந்த நபர், பெண்ணை ஆசிட் குடிக்க வைத்து, கத்தியால் குத்திய கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், ஐதராபாத்தில் காதலை ஏற்க மறுத்த பெண்ணை, கோடரியால் தாக்கிய இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.  

ஐதராபாத்தின் மீர்பெட் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ராகுல் என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். 

அப்போது, அந்த இளம் பெண், ராகுலின் காதல் வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். இதன் காரணமாக, கடும் ஆத்திரமடைந்த ராகுல், திட்டமிட்டு அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று உள்ளார்.

அப்போது, வீட்டில் தனியாக இருந்த அந்த பெண்ணின் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இதனையடுத்து, அந்தப் பெண்ணை கோடரியால் பலமாகத் தாக்கி உள்ளார். இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், ராகுலிடமிருந்து அந்த பெண்ணை மீட்டு அவரை அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

மேலும், அங்குள்ள காவல் நிலையத்திற்கும் அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகார் பெற்றுக்கொண்டனர். அப்போது, அந்த பெண் ராகுலின் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில், வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து, ராகுல் மற்றும் அவருக்கு உதவிய இருவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.