நடுக்காட்டில் தலை துண்டிக்கப்பட்டு நிர்வாண நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்டெடுக்கப்பட்டது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அந்த பெண்ணின் கணவர் உள்பட இருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ராஞ்சியில் உள்ள காட்டுப்பகுதியில் "கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணின் உடல் தலையில்லாமல் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டது. 

வழக்கை பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் சுபியா பிரவீன் என்பது தெரிய வந்தது.

இது குறித்து, கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரிடம் காவல் துறையினர் விசாரணை செய்ய முடிவு செய்த நிலையில், அவர் தலைமறைவானார்.

இந்நிலையில், போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணின் கணவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அதாவது, விசாரணையில், கைது செய்யப்பட்ட நபரின் பெயர் பிலால் என்றும், பிலாலின் முதல் மனைவியின் பெயர் ஷபோ என்பதும் தெரிய வந்தது.

அத்துடன், பிலாலின் இரண்டாவது மனைவி தான் சுபியா பிரவீன் என்பதும், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் காவல் துறையினர், பிலாலை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சிறையில் இருந்து வெளியில் வந்த அவர், சுபியா மீது மிகுந்த ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இதற்கிடையே, சுபியாவுக்கும் - ஷபோவுக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்து உள்ளது. இதனால், ஷபோவா தன் கணவர் பிலாலுடன் சேர்ந்து சுபியாவை தீர்ந்து கட்ட முடிவு செய்து திட்டம் தீட்டி உள்ளனர். 

அதன் படி, அவர்கள் இருவரும் சேர்ந்து, சுபியாவை அடித்துக் கொன்று தலையைத் தனியாக வெட்டி எடுத்து விட்டு, உடலை மட்டும் அந்த பகுதியில் உள்ள காட்டில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இதையடுத்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.