திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு சென்ற புது பெண்ணை, வரதட்சணை அதிகம் கேட்டு கடும் சித்திரவதை செய்த கணவனின் குடும்பத்தினர் மற்றும் அவரது சகோதர்கள், அந்த பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து, உடலில் தீ வைத்து சுட்டு கொடுமைப்படுத்தி உள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரம் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு கொடூரம் அரங்கேறி இருக்கிறது. 

உத்தரப் பிரதேசம் மாநிலம் புடான் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கும், அங்குள்ள கோட்வாலி சஹாஸ்வான் பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளம் பெண் ஒருவருக்கும், இரு வீட்டார் முறைப்படி கடந்த மாதம் திருமணம் நடைபெற்று உள்ளது.

இதனையடுத்து, திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு சென்ற புது பெண், தனது கணவன் வீட்டில், கணவர் மற்றும் இரண்டு மைத்துனர் மற்றும் மாமனார் மாமியாருடன் வசித்து வந்தார்.

திருமணத்திற்கு பிறகு, முதல் இரவு முடிந்ததும் அந்த பெண்ணை கணவனின் குடும்பத்தினர் வரதட்சணை அதிகம் கேட்டு கொடுமைப்படுத்த தொடங்கி உள்ளனர்.

முக்கியமாக, திருமணமாகி வந்ததும் அந்த 20 வயதான இளம் பெண்ணை, மாமனாரே வரதட்சணை அதிகம் கேட்டு கடுமையாக கொடுமை செய்ய தொடங்கி இருக்கிறார். ஆனால், அந்த பெண், இவற்றையெல்லாம் கேட்டு பதில் எதுவும் கூறாமல் அமைதியாகவே அந்த வீட்டில் இருந்த வந்திருக்கிறார். இதனால், கடும் ஆத்திரமடைந்த அந்த குடுபத்தினர், அந்த பெண்ணிடம் இருந்து எப்படயாவது வரதட்சணையை பெற்று விட வேண்டும் என்று திட்டம் தீட்டி உள்ளனர்.

அன் படி, திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு வந்த அந்த புது பெண்ணை, கணவனின் சகோதர்கள் இருவரும் சேர்ந்து, வெறித் தீர மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், தனது மச்சினர்களின் பாலியல் பலாத்காரத்தில் இருந்து மீள எவ்வளவோ போராடி இருக்கிறார். ஆனாலும், அந்த பெண்ணால் அவர்களிடம் போராட முடியாமல், அவர்களின் காம பசிக்கு இறையாகிப்போனாள்.

இப்படியாக, தனது கணவன் வீட்டில் நடக்கும் பாலியல் அத்து மீறல்கள் குறித்து, தனது தந்தைக்கு போனில் தகவல் தெரிவித்து இருக்கிறார் பாதிகக்ப்பட்ட அந்த பெண். ஆனால், அவரது தந்தை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இப்படியாக, புகுந்த வீட்டில் பல முறை அந்த பெண் மைத்துனர்களால் தொடர்ச்சியாக பாலியல் பலாதகாரம் செய்ய்பபட்டு இருக்கிறார். இப்படியான பலாத்கார சம்பவத்திற்கு பிறகு, அந்த பெண் தனக்கு நடக்கும் கொடுமைகளைப் பற்றி தனது தந்தையும் பல முறை கூறி அழுதிருக்கிறார். ஆனால், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில், என்ன செய்தும் அந்த பெண்ணிடம் இருந்து கூடுதலான வரதட்சணையை பெற முடியவில்லை என்று, கடும் ஆத்திரம் அடைந்த கணவனின் குடும்பத்தினர், அந்த பெண்ணை கடந்த வாரம் அந்த வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து கட்டையால் அடித்து கொடுராமாக தாக்கி உள்ளனர்.

மேலும், அந்த பெண்ணின் உடலில் பல இடங்கில் தீ வைத்து சுட்டு மிக கொடூரமான முறையில் உச்சப்பட்சமாக கொடுமைப்படுத்தி உள்ளனர். 

இந்த தகவல், எப்படியோ அந்த பெண்ணின் தந்தைக்கு சென்று உள்ளது. இதனால், கடும் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் தந்தை, இதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாது என்று, அந்த வீட்டிற்கு சென்று தனது மகளை மீட்டு, அங்குள்ள அரசு மருத்துவுமனையில் சேர்ந்த்தார். அங்கு, அந்த பெண்ணிற்கு தீவிரமாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதனையடுத்து, மகளின் புகுந்த வீட்டினர் மீது, அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த பெண்ணின் தந்தை புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் கணவனின் 2 சகோதர்கள் ஆகியோரை கைது செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் இந்த விசாரணை வலையத்திற்குள், அந்த பெண்ணின் மாமனார் மற்றும் மாமியார் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே, கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.