கணவனை பிரிந்த பெண் ஒருவர், சாமியாரின் காம வலையில் விழுந்ததால், அவரை பலாத்காரம் செய்து பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத்தின் அகமதாபாத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருக்கும் வடாஜ் பகுதியைச் சேர்ந்த 29 வயதான பெண் ஒருவர், ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், தனது கணவருடன் வசித்து வந்தார். அப்போது, கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அந்த பெண் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே, தனது கணவனை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

இப்படி, அந்த பெண் 2 ஆண்டுகளாகத் தனியாக வாழ்ந்து வந்த நிலையில், மீண்டும் தனது கணவரோடு சேர்ந்து வாழ அந்த பெண் விரும்பி உள்ளார். அதனால், தனது கணவரோடு சேர்ந்து வாழ்வது தொடர்பாக அதே பகுதியில் உள்ள வாகெலா என்ற சாமியாரின் உதவியை அந்த பெண் நாடிச் சென்று உள்ளார். 

அதன்படி, சாமியாரை சந்தித்த அந்த பெண், கணவரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்கிற தன்னுடைய ஆசையை கூறி இருக்கிறார். அதற்காக, அவரிடம் ஏதாவது செய்து தன்னுடைய கணவரின் மனதை மாற்ற வேண்டும் என்றும், அந்த பெண் சாமியாரிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறார். 

இதனையடுத்து, அந்த பெண்ணை பற்றி அவர் முழு விபரங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இப்படி, அந்த பெண்ணைப் பற்றி எல்லாவற்றையும் கேட்டு தெரிந்துகொண்ட அந்த சாமியார், அந்த பெண்ணை தன்னுடைய வலையில் விழ வைக்க திட்டம் போட்டு உள்ளார். 

அதன்படியே, அந்த பெண்ணிடம் சில விதமான மந்திர பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறி, 2.50 லட்சம் ரூபாய் பணத்தைப் பறித்துக் கொண்டார். 

அதன் பிறகு, அந்த பெண்ணை அந்த பகுதியில் உள்ள பல தனியார் ஹொட்டல்களுக்கு அழைத்துச் சென்ற அந்த சாமியார், அந்த பெண்ணை எப்படியோ பேசி மயக்கி, தனது வலையில் விழ வைத்து, பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார் என்று கூறப்படுகிறது. 

மேலும், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததை, அந்த பெண்ணுக்கே தெரியாமல் அந்த சாமியார் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டதாகத் தெரிகிறது.

அதன் தொடர்ச்சியாக, அந்த வீடியோ காட்சியை காட்டி அந்த பெண்ணை பல முறை மிரட்டி மிரட்டியே, தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்ததோடு, அந்த பெண்ணிடம் உள்ள பணத்தையும் மிரட்டிப் பறித்துக்கொண்டு வந்திருக்கிறார்.

அதனால், அந்த சாமியாரின் மிரட்டல் மற்றும் டார்ச்சர் தாங்க முடியாமல் நொந்து போன அந்த பெண், கடந்த மார்ச் 5 ஆம் தேதி அன்று தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். 

இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண், பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியதும், அந்த சாமியார் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், இது தொடர்பா தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே, கணவனை பிரிந்த பெண், மீண்டும் கணவனோடு சேர்ந்து வாழ சாமியாரின் உதவியை நாடி வந்த நிலையில், சம்மந்தப்பட்ட சாமியார் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி வந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.