“என்னுடைய கிராமம் வளர்ச்சி அடையும் வரை நான் திருமணமே செய்துகொள்ள மாட்டேன்” என்று, இளம் பெண் ஒருவர் அதிரடியாக அறிவித்து உள்ளார். 

கர்நாடகம் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் தான், இப்படி ஒரு அறிவிப்பை அறிவித்து, அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்து உள்ளார்.

கர்நாடகம் மாநில தாவணகெரே மாவட்டம் மாயகொண்டா தாலுகா எச்.ராமபுரா கிராமமானது, மலைப்பகுதி மற்றும் வனப்பகுதியை ஒட்டிய பகுதியாக இருக்கிறது. 

இந்த கிராமத்தில் பல ஆண்டுகளாக முறையான சாலை வசதி இல்லாமல் இருந்து வருவதாக, குற்றம் சாட்டப்படுகிறது. 

அதே போல், அந்த பகுதியில் கிட்டதட்ட ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை வசதி இல்லாததால் வெறும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.

இது தொடர்பாக, அந்த பகுதியில் உள்ள அதிகாரிகளிடம் இந்த எச்.ராமபுரா கிராமத்தை குறிப்பிட்ட ஒரு இளம் பெண் உட்பட, அந்த பகுதியில் பல்வேறு தரப்பினரும் மனு அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கிவல்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான், எச்.ராமபுரா கிராமத்தைச் சேர்ந்த படித்து முடித்த  பிந்து என்ற இளம் பெண் ஒருவர், அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் புதிய சபதம் ஒன்றை ஏற்றுள்ளார்.

அதாவது, “தனது கிராமம் வளர்ச்சி அடையும் வரை, நான் திருமணம் செய்ய மாட்டேன்” என்று, அதிரடி அறிவித்து உள்ளார். 

அந்த கிராமத்தில், “இணையதள வசதி, செல்போன் சேவையும் இல்லாமல் இருக்கிறது. இவற்றுடன்,  அங்கு முறையான சாலை வசதிகள் இல்லாததால், பேருந்துகள் அங்கு இது வரை அந்த கிராமத்திற்கு இயக்கப்படவில்லை” என்றும், கூறப்படுகிறது. 

இதன் காரணமாக, “பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும், அங்கிருந்து வேலைக்கு செல்பவர்களும், அவசர மருத்துவ உதவி தேவைப்படுவோரும் தினந்தோறும் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகிறார்கள்” என்று, அந்த இளம் பெண் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். 

“இப்படியாக, தனது கிராமத்தின் நிலையையும், மக்களின் சிரமங்களையும் கண்கூடாக பார்த்த அதே கிராமத்தை சேர்ந்த பிந்து என்ற இளம் பெண், தன்னுடைய அதிருப்தியை அங்குள்ள ஊடகங்கள் மூலமாக வெளிப்படுத்தி உள்ளார்.

குறிப்பாக, “தனது கிராமத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக பிரதமர், மாநில முதலமைச்சர் ஆகியோருக்கு, இளம் பெண் பிந்து கடிதம் எழுதியிருக்கிறார்.

மாணவி பிந்து அனுப்பிய கடிதத்திற்கு கர்நாடக மாநில தலைமை செயலாளர் பதில் கடிதமும் அனுப்பியிருக்கிறார். 

அந்த பதிலில், “விரைவில் உங்கள் ஊரின் பிரச்சினைகளை தீர்வு காணப்படும்” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.